தமிழ்நாடுபயணம்

நேற்று 2½ லட்ச மக்கள் சென்னை திரும்பினர்!

கடந்த 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னையில் தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சென்னைக்கு வருகை

இதற்காக 3 நாட்களுக்கு முன்னதாகவே அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 6 லட்ச மக்கள் பயனடைந்தனர். இதேபோல் தீபாவளி முடிந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன்முலம் நேற்று ஒரே நாளில் சுமார் 2½ லட்ச மக்கள் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இன்று 30 ஆயிரம் பேர் சென்னைக்கு வர முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் இந்த வாரம் முழுவதும் மக்கள் வெளியூர்களில் இருந்து சென்னை வருவார்கள் என்று கருதப்படுகிறது.

Related posts