சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் ‘கட்டா குஸ்தி’ படத்தின் வீடியோ பாடல்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

வீடியோ பாடல்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த 2-ம் தேதி தமிழ்-தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தின் ‘சண்ட வீரச்சி’ எனும் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts