படபிடிப்பு
ஜுனியர் எம்.ஜி.ஆர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் தமிழ் தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் கிரிஷா குரூப், ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், தேர்ட் ஐ கிரியேஷன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பூஜை சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குனர் தமிழ், பிக்பாஸ் டேனியல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.