வணங்கான் படம்
இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இதில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வந்தார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இயக்குனர் பாலா கதையில் மாற்றங்களை செய்துள்ளார். அந்த மாற்றங்கள் சூர்யாவிற்கு பொருந்தாது என்பதால் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா அறிவித்தார். ஆனாலும் ‘வணங்கான்’ படத்தின் பணிகள் தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.