இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அகதிகள் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்துள்ளார்.
ராமேஸ்வரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குல மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இதுவரையிலும் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து 120க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை திருகோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அகதிகள் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரை வந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து மண்டபம் கடலோர காவல் நிலைய போலீசார் மீட்டுள்ளனர். அவர்களிடம் கடலோர போலீசாரும் மற்றும் மத்திய மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

