நடிகை நயன்தாரா திடீர் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தஇயக்குனர் விக்னேஷ், நயன்தாரா ஜோடி கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து நடிகை நயன்தாரா அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நயன்தாராவுக்கு வாந்தி ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. உணவின் ஒவ்வாமை காரணமாக தான் வாந்தி ஏற்பட்டதாகவும் சில மணி நேரங்கள் சிகிச்சைக்கு பின்னர் நயன்தாரா வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

