தக்காளி விலை
ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் கனமழை பெய்ததால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் மழை குறைந்துள்ளதை அடுத்து தக்காளியின் விலை குறைந்துள்ளது.
அதன்படி மொத்த விற்பனை கடைகளில் ரூ.17-க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. மேலும், ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது.