சினிமாவெள்ளித்திரை

15 ஆண்டுகளை நிறைவு செய்த பொல்லாதவன் : கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

பொல்லாதவன் படம்

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொல்லாதவன்’. இதில் திவ்யா ஸ்பந்தனா கதாநாயகியாக நடிக்க, சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

கொண்டாட்டம்

இந்நிலையில், ‘பொல்லாதவன்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் வெற்றிமாறன், தனுஷ் மற்றும் திவ்யாஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related posts