ஆன்மீகம்தமிழ்நாடு

சென்னையில் களைகட்டும் அகல் விளக்கு தயாரிப்பு பணிகள்!

அகல் விளக்கு

வருகிற 17-ம் தேதி தமிழ் மாதமான கார்த்திகை பிறக்கிறது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 6-ம் தேதி திருக்காத்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. காத்திகை தீபம் அன்று வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். இதனால் சென்னையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னையில் ராயப்பேட்டை, கொசப்பேடை பகுதிகளில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு வண்ணங்களில் அகல்விளக்குகள் ரூ.10 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.

Related posts