டைட்டில் போஸ்டர்
நடிகர் நாக சைதன்யா நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படத்திற்கு ‘என்சி22’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டது. இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘கஸ்டடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Let’s be the change we want to see in the world! Happy bday bro @chay_akkineni let the hunt begin! #Custody #AvenkatPrabhuHunt @SS_Screens @ilaiyaraaja @thisisysr @srkathiir @thearvindswami @IamKrithiShetty @realsarathkumar @rajeevan69 #vp11 pic.twitter.com/ELhxOkfuci
— venkat prabhu (@vp_offl) November 23, 2022

