டிரைலர் வெளியீடு
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத்தொடர்ந்து மைனா, தலைவா, தெய்வதிருமகள், ராட்சசன் ஆகிய படங்களில் நடித்ததின் மூலம் தமிழில் பிரபலமானார். இவர் நடிப்பில் இறுதியாக ஓடிடியில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அமலாபால் நடிப்பில் தற்போது ‘தி டீச்சர்’ என்ற மலையாள படம் உருவாகியுள்ளது. நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான அதிரன் படத்தை இயக்கிய விவேக் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Maintain pindrop silence for The Teacher. Meet Devika, she’s here to teach andddd to learn! https://t.co/39ZIMHc0GW
— Amala Paul ⭐️ (@Amala_ams) November 22, 2022