ரிலீஸ் தேதி
‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத்தொடர்ந்து மலையாளத்தில் இவர் இயக்கிய ‘பிரேமம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோல்டு’. இதில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் சில காரணங்களால் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘கோல்டு’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.