சினிமாவெள்ளித்திரை

உண்மை கதையில் நடிக்கும் கலையரசன்!

சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார்.

உண்மை கதை

கடந்த 2014ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கலையரசன். அதனைத்தொடர்ந்து ராஜா மந்திரி, அதே கண்கள், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் வாழை என்ற படத்தில் நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Related posts