புதிய அப்டேட்
சார்ப்பட்டா பரம்பரை வெற்றியைத் தொடர்ந்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேப்டன். ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் கேப்டன் படத்தில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்டன் படத்தின் ‘கைலா’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
The wave of love and magic coming your way. #Kylaa in @shreyaghoshal & #YazinNizar voices releases tomorrow at 5PM! 💕🎵@arya_offl @ShaktiRajan @Udhaystalin @SimranbaggaOffc #AishwaryaLekshmi @immancomposer @madhankarky @ThinkStudiosInd #TheShowPeople @thinkmusicindia pic.twitter.com/ZxKmdZnZl8
— Red Giant Movies (@RedGiantMovies_) August 10, 2022

