தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடிப் படகினையும் விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், இலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால் மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

