திடீர் சந்திப்பு
சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ‘பயனி’ என்ற இசை ஆல்பம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போனி கபூர், அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தை தயாரித்து வருகிறார்.
இதனால் இவர்களிடம் இருந்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Was a delight catching up this evening over coffee with you dear @BoneyKapoor uncle ..reminiscing old times,remembering pappi akka n discussing interesting work ! pic.twitter.com/GzIly2220w
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 24, 2022

