குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார்.
பதவியேற்பு
இந்திய நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் கடந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

