மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி திருவிழா
ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும் கலைக்கட்டும். குறிப்பாக ஐப்பசி நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக காணப்படுகிறது. அந்த வகையில் சிவபெருமானின்12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது வழக்கம். வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த ஆவணி மூலத்திருவிழா அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23ம் தேதி காலை 10.59 மணிக்குள் சுவாமி சன்னதியில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அன்றைய தினத்தில் இருந்து 28ம் தேதி வரை கோவிலுக்குள் சந்திரசேகர் சுவாமி வீதி உலா 2-ம் பிரகாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

