நாமக்கல்லில் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
விலை அதிகரிப்பு
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏற்கனவே, 4 ரூபாயாக இருந்த ஒரு முட்டையின் விலை 20 பைசா உயர்ந்த, ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4.20 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 3.90 ரூபாய் கிடைக்கும். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலையானது சென்னை 425, பெங்களூர் 405, டெல்லி 422, ஹைதராபாத் 385, மும்பை 435, கொல்கத்தா 475 விற்பனை செய்யப்படுகிறது. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ 94 ரூபாயாக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ 95 ரூபாயாக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளனர்.

