அறிவியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுதொழில்நுட்பம்

சிவகளை அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிப்பு !

தூத்துக்குடி சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகளை அகழாய்வு

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதில் சிவகளை பரம்பு, ஸ்ரீ பராக்கிரம பாண்டியன் திரடு மற்றும் பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.
கடந்த மாதத்தில் பராக்கிரம பாண்டியன் திரடு பகுதியில் நடந்த ஆய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள், முது மக்கள் தாழிகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பராக்கிரம பாண்டியன் திரடு அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன அறிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது. இது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts