குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. பாஜக விடம் உள்ள மாநிலத்தை கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக முயன்று வருகின்றது. சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வேரவல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார் பேசினார். அப்போது அவர், ‘‘குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலையில்லாத ஒவ்வொரு இளைஞரும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.மேலும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாநிலத்தில் பத்து லட்ச காலி அரசு பணியிடங்கள் உருவாக்கப்படும்’ என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

