பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொல்லை
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த ஜூலை 15ம் தேதி இரவு நேரத்தில் அங்கு பயிலும் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு நபர் வழிமறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறபடுகிறது. மேலும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக மாணவி கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பாக ஐ.ஐ.டி நிர்வாகம் விசாரணைக்குழு அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது. இதில் இரவு பணியில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின், ஐ.ஐ.டி வளாகத்தில் கடை நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற நபர் தான் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை இன்று காலை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

