கேரளாவில் கனமழை பெய்து வருவதால் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குட்டிக்கானம், தொடுபுழா ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாநிலம் முழுவதும் எண்ணிக்க 11 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டுமே 4 பேர் உயிரந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

