அரசியல்இந்தியாசமூகம்பயணம்

இந்தியாவில் உள்ள 81 சீனர்களுக்கு விசா ரத்து – நாட்டை விட்டு வெளியேற உத்தரவு !

இந்தியாவில் உள்ள 81 சீனர்கள் விசா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேவும் உத்தரவு விடப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார்.

சீனர்களுக்கு விசா ரத்து

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. எனினும், அக்னிபத் திட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு வேலையின்மை ஆகியவை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.  எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியின் காரணமாக பல்வேறு நாட்கள் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 32 மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறுகையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி, 81 சீனர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார். இந்த நோட்டீஸ் பெற்றவர்களின் இந்திய விசா விரைவில் ரத்து செய்யப்படும்.117 பேர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு உள்ளனர். விசா நடைமுறை விதிகளை மீறியதற்காகவும் மற்றும் மற்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 726 பேர் தீங்கு விளைவிப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்’ என அவர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Related posts