இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.
பவுர்ணமி கிரிவலம்
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் அருகே உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி கிரிவலம் செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வது நிகழ்வு. இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11ம் தேதி இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்நிலையில், விடியற்காலை முதலே கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வலிகிறது. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

