சமூகம்தமிழ்நாடுவணிகம்

தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு !

தமிழகத்தில் மீண்டும் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பால்

தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 2.50 கோடி லிட்டர் பால் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலையும் மீதம் உள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றது. தினமும் தனியார் நிறுவனங்கள் மூலம் 1.25 கோடி லிட்டர் பால்பாக்கெட்டுகள் விற்பனைக்கு வருகிறது.

பால் விலை உயர்வு

தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து பால் விலையை உயர்த்தி வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. அதன்படி இன்று முதல் சீனிவாசா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

 

Related posts