ரிலீஸ் தேதி
போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. இயக்குனர் எச்.வினோத் இப்படத்தை இயக்க, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ஜி.எம்.சுந்தர், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த 31-ம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலானது. இதனிடையே அண்மையில் தணிக்கை செய்யப்பட்ட இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றது.
இந்நிலையில், ‘துணிவு’ படம் வருகிற 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal💥#ThunivuFromJan11 #ThunivuPongal#Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures pic.twitter.com/MzNw7eJJaP
— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023

