சினிமாவெள்ளித்திரை

துணிவுடன் மோதும் வாரிசு ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ரிலீஸ் தேதி

டில் ராஜு தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். மேலும், இதில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஷாம், யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இதனிடையே இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ‘வாரிசு’ படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts