சினிமாவெள்ளித்திரை

யோகி பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யோகி பாபு ‘பொம்மை நாயகி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்தை இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ளார். இதில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகன ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை 4-ம் தேதி அறிவிப்பதாக கூறப்பட்டது.

அதன்படி ‘பொம்மை நாயகி’ படம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts