திடீர் சந்திப்பு
2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன். அதனைத்தொடர்ந்து காதல்கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வருகிற 29-ம் தேதி நானே வருவேன் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனை அவரது குடும்பத்தினருடன், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022

