டவிட்டர் பதிவு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அந்த புகைப்படத்துடன் மீம் ஒன்றை இணைத்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மீன்ல விரால் நல்லது,
மீம்ஸ் viral ஆவது நல்லது!(எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது)
இங்கு
நல்ல
மீம்கள்
விற்கப்படும் ! pic.twitter.com/B1eMrLlhJG— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 26, 2022