ஆன்மீகம்இந்தியா

பிரம்மோற்சவ விழா தொடங்கியது : திருப்பதியில் இன்று மாலை கொடியேற்றம்!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியதையடுத்து இன்று மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார் பணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தங்க கொடிமரத்தில் இன்று மாலை கொடியேற்றப்படுகிறது. மேலும், பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.

இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி ஏழுமலையான் கோவில் மின் விளக்குகள், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Related posts