Editor's Picksஉலகம்

உலகளவில் டிரெண்டாகும் ஒற்றை வார்த்தை ட்வீட் !

சமூக வலைதளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் ‘ஒற்றை வார்த்தை ட்வீட்’ என்ற சவாலை தமிழக பிரமுகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ட்விட்டர் டிரெண்டிங்

சமூக வலைதளமான ட்விட்டரில் நேற்று முதல் ‘ஒரு வார்த்தை ட்வீட்’ வைரலாகி வருகிறது. ஒரே ஒரு வார்த்தையில் தங்களது கொள்கை அல்லது விருப்பத்தை சொல்ல வேண்டும். இது தான் தற்போது டிரெண்டாகி வரும் ஒற்றை வார்த்தை ட்வீட். இதன் அடிப்படையில் முக்கிய பிரபலங்கள் ஒரு வார்த்தையை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சவாலை அமெரிக்கா மட்டுமின்றி இந்திய பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஆம்ட்ராக் நிறுவனம் முதலில் ‘ட்ரெயின்’ என்று நேற்று ட்வீட் செய்தது.

தமிழக பிரமுகர்கள்

இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘டெமாக்கரசி’ என பதிவிட்டார். அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் “கிரிக்கெட்” என்று குறிப்பிட்டார். மேலும், தமிழக முதமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘திராவிடம்’ என்று ட்வீட் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ் தேசியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts