சத்யபாமா பல்கலைக் கழகம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
பிரபல இசையமைப்பார்
1997-ம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது வரை இவர் கிட்டத்தட் 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்து சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவர் தற்போது ‘நானே வருவேன்’, ‘லவ் டுடே’ ‘லத்தி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
டாக்டர் பட்டம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.