சினிமாபயணம்

நடிகர் அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை !

‘ஏ.கே. 61’

‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏ.கே. 61’ எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். மேலும், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், புனே ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுற்றுப்பயணம்

இதனிடையே நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இவர்களுடன் நடிகை மஞ்சு வாரியரும் தற்போது இணைந்து பயணம் செய்து வருகிறார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைந்ததில் பெருமிதம் அடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts