சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் சிம்பு பட ட்ரைலர் !

சிம்பு பட ட்ரைலர்

மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதன்பெயரில் இத்திரைப்படம் வரும் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்படி இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts