மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் (PEPSICO INDIA HOLDINGS pvt.ltd) பணிபுரியும் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையில் இருந்து நிறுத்தியதாகவும் மீண்டும் எங்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்களிடம் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தார் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP.

இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு VG.குமரன் அவர்கள், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மாணவரணி செயலாளர் திரு T.G.தணிகைவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

