ஹிந்தி நடிகர்
75வது சுதந்திர தின விழாவை ‘அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டார். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அப்போது அமீர்கான் தனது மகளுடன் நிற்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

