அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் வங்கி ஊழியருக்கும் பங்கு. விடிய விடிய விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்.
ஃபெடரல் வங்கி
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். மற்றும் பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வங்கி வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர்வங்கிக்குள் தடாலடியாக புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களையும் பொதுமக்களையும் கத்திமுனையில் மிரட்டிய மர்மநபர்கள் அனைவரையும் கட்டிப்போட்டனர். பின்னர் 11 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விடியவிடிய நடத்திய விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் முருகன் மற்றும் மேலும் இருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.
வங்கி ஊழியர் முருகன்
உடனே முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்பட 6 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். சென்னை பாடியை சேர்ந்த முருகன் ஃபெடரல் வங்கியில் 2 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் வங்கிக்கு வந்த முருகன் தனது இரண்டு நண்பர்களையும் போன் செய்து வரவழைத்துள்ளார்.

வங்கியின் கீழ் தளத்தில் இருந்த இரண்டு ஊழியர்களையும் மேல் தளத்தில் பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரையும் அடைத்து வைத்துள்ளனர். முதலில் வங்கி காவலாளி சரவணன் என்பவருக்கு மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். காவலாளி வேண்டாம் என சொல்லியும் கட்டாயப்படுத்தி முருகன் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த காவலாளி சிறிது நேரத்தில் மயங்கியதும் கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார்.
திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை
பின்னர் வங்கி மேனேஜர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலட்சுமியை கத்தியை காட்டி மிரட்டி கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் நகைகளை முழுவதும் கொள்ளையடித்த பிறகு மேலாளர் சுரேஷ் மற்றும் பெண் ஊழியர் விஜயலட்சுமியை ஸ்ட்ராங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு தனது நண்பர்களுடன் தப்பியுள்ளார். முருகன் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது.

