‘கொலை’ படத்தின் செய்தியாளகர்கள் சந்த்ப்பின் போது மேடையிலேயே கோபமடைந்தார் இயக்குனர் மிஷ்கின்.
விஜய் ஆண்டனி படம்
கொலைகாரன் படத்தை அடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கொலை. ‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் நீர் குமிளி’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் மிஷ்கின்
இந்நிலையில், கொலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பேசும் போது அவருக்கு பின்னல் இருந்த சிலர் பேசிக்கொண்டே இருந்தனர். அதற்கு கோபமடைந்த மிஷ்கின் பேச வேண்டுமென்றால் வெளியே போய் பேசுங்கள் என்று கூறினார்.

