சினிமாவெள்ளித்திரை

அடுத்தடுத்து வெளியாகும் துணிவு அப்டேட் : உற்சாகத்தில் ரசிகர்கள்!

துணிவு பொங்கல்

நடிகர் அஜித் நடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் எச்.வினோத் இந்த படத்தை இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

புதிய அப்டேட்

இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ கடந்த 9-ம் தேதி வெளியாகி வைரலானது. இதனையடுத்து இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ கடந்த 18-ம் தேதி வெளியானது. இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் ‘கேங்ஸ்டா’ எனும் மூன்றாவது பாடல் வருகிற 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related posts