பேரறிவாளன் விடுதலை வழக்கில் எந்த அரச முடிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் தற்போது அந்த வழக்கில் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது விசாரணை செய்து வந்தது. நேற்று கடைசி நாள் விசாரணையில் பல்வேறு முக்கிய விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவு மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அமர்வு உச்ச நீதிமற்றதில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
நீதிமன்ற வாதம்
மத்திய அரசு சார்பாக இணை ஜெனரல் நடராஜன் வழக்கில் ஆஜர் ஆனார். மத்திய அரசு வாதம், இந்த வழக்கில் மாநில அரசோ ஆளுநரோ முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டப்பிரிவு 432 படி குடியரசுத் தலைவருக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதம் வைத்தது. இந்த சட்டம் மாநில அரசு மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றாலும், விசாரணை ஆணையம் எது என்றும் எந்த வழக்கு என்பதை பொருத்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம் என்று வாதம் வைத்தது.
நீதிபதிகள் கேள்வி
இதை அடுத்து நீதிபதிகள் ஏழுப்பிய கேள்வியில், ‘அப்படி என்றால் கொலை வழக்கில் முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிகின்றிர்களா?. 161 Cr PC சட்ட பிரிவு படி ஆளுநர் இதுவரை பலரை விடுதலை செய்து இருக்கிறார்களே. மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு மட்டும் தான் இருக்கிறதா. 70வது வருடங்களாக ஆளுநர்கள் விடுதலை செய்தது எல்லாம் அதிகார அத்து மீறல் ஆகிவிடுமா ? அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மாறிவிடுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு வைத்த வாதத்தில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்ததால் தான் இது மாநில அரசின் வரம்பிற்கு கீழ் வராது. மாநில அரசின் விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே அதில் மாநில அரசு முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு வாதம் வைத்தது.
நீதிபதிகள் காட்டம்
‘IPC யின் கீழ் தண்டனை பெற்றவற்கு மத்திய அரசு கருணை வழங்க முழு அதிகாரம் உள்ளது. சட்டவிதிகளை மீறி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அப்படி என்றால் 161 Cr PC சட்ட பிரிவே வெற்றுக்காகிதம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா’ என்று நீதிபதிகள் கடுமையான கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு வாதத்தை மாநில அரசும் எதிர்த்து. அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.