தமிழ்நாட்டில் இந்து மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று பாஜக, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியுள்ளார்.
எச்.ராஜா பேச்சு
இந்து தர்ம பேரவை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா பாலகோகுலம் என்ற பெயரில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்க முயற்சி செய்தனர். மேலும், தமிழ்நாட்டில் இந்து மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்’ என்று எச்.ராஜா கூறினார்.

