ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
தாலி சங்கிலி பறிப்பு
ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல் மற்றும் மனைவி விஜயலட்சுமி. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணிஅளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் டி. வி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, விஜயா தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஒடம்பிடித்தார். இதில், அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூச்சலிட்டு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக விஜயலட்சுமி ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார், தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

