அரசியல்இந்தியாவிவசாயம்

தமிழகத்தில் இந்தாண்டு நெல் உற்பத்தியில் புதிய சாதனை !

தமிழகத்தில் இந்தாண்டு நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு

தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் அதிக சாகுபடி செய்தனர். இந்நிலையில், நாட்டிலுள்ள விவசாய உற்பத்தியின் புள்ளி விவரம் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021 – 2022 நெல் சாகுபடி பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

Related posts