அரசியல்இந்தியாமருத்துவம்

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர் மாற்றம் !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் மாற்றம்

மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி நேரில் அடிக்கல் நாட்டினார். இதனால், மதுரை சுற்றுவட்டார மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக கூறினார் . இந்நிலையில், மதுரை உட்பட நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவதற்காக, உள்ளூர் சுதந்திர போராட்ட வீர‌ர்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று மறைக்கப்பட்ட தியாகிகள் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 4 பெயர்கள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பெயர் வைப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது, மதுரை, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர் உட்பட எய்ம்ஸ், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் உள்ளிட்ட 23 மருத்துவமனைகளுக்கு பொருந்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts