அரசியல்உலகம்பயணம்

ஷாங்காய் உச்சி மாநாடு – உலகின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உச்சி மாநாடு

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை, இந்தியப் பிரதமர் மோடி, சர்வதேச மாநாடுகள் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக பல நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டாலும், காணொலி காட்சி மூலம் சீன அதிபர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை விவகாரத்தால், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts