34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுப்பட்டு வருகிறது. அதன்பெயரில் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் வரும் 21-ம் தேதி 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடைபெறவுள்ளது.
இலக்கு நிர்ணயம்
இதற்காக சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்று சுமார் 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

