திருவள்ளூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலியானார். இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் பலி
திருவள்ளூர், அடுத்த வேப்பம்பட்டு – திருநின்றவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உரிழந்துள்ளார். இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் வெள்ளை நிறத்தில் முழுக்கை சட்டையும், நீல நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே துணை ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

