தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இது குறித்து பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம். இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன். சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பின் பொது செஸ் லிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளேன். தொடர்ந்து நீட், புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்கப்படும். மேலும், தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

